ஜூன் மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை ... மாணவர்கள் கொண்டாட்டம்!

 
விடுமுறை விடுமுறை

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் ஜூன் மாதத்தில் இன்னும் 7 நாட்கள் விடுமுறை நாட்கள் உள்ளன. இதனால் விடுமுறை முடிந்து விட்டதே என்று பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் வருத்தப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை என்று கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவி விடுமுறை உற்சாகம்

இந்த ஜூன் மாதத்தில் வரக்கூடிய 3 வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை ஒன்றாகச் சேர்த்துக் கணக்கிடும்போது மொத்தம் 6 நாட்கள் விடுமுறை எளிதாகக் கிடைத்துவிடுகிறது. வழக்கமான இந்த வார இறுதி விடுமுறை நாட்கள் மாணவர்களின் வாராந்திர சோர்வை நீக்கி, அவர்களைப் புத்துணர்ச்சியுடன் படிக்க வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மாணவர்கள் விடுமுறை

இதுதவிர, ஜூன் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வாரத்தில் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை உட்பட இந்த மாதத்தில் மொத்தம் 7 நாட்கள் மாணவர்களுக்கு நல்ல லீவு கிடைக்கிறது.