நாளை முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை... NHல் இப்பவே போக்குவரத்து நெரிசல்!

 
விடுமுறை பள்ளி மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்குத் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான மொஹர்ரம் திருநாளை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை  மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குப் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

வெள்ளிக்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து, வழக்கமான வாராந்திர விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இணைந்து வருவதால், ஒட்டுமொத்தமாகத் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இந்தத் தொடர் விடுமுறை காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும் ஏதுவான சூழல் உருவாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஈசிஆர் ஓஎம்ஆர் என்.எச்.தேசிய நெடுஞ்சாலை வாகன

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் வரும் திங்கள்கிழமை (ஜூன் 29) அன்று வழக்கம் போலப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் முறைப்படி திறக்கப்பட்டுச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை முன்னிட்டுத் தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி பலரும் ஒரே நேரத்தில் கிளம்பத் தயாராகி வருகின்றனர். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இப்போதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்படத் துவங்கியுள்ளது. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் கூட்ட நெரிசலைக் காண முடிந்தது.