பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா - அக்.22-ல் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
#BREAKING: சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 22-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தன்று அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்

இந்த ஆண்டின் 1041-வது சதய திருவிழா அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. மங்கல இசையுடன் தொடங்கும் இவ்விழாவில் பல்வேறு கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழனின் 1036வது சதயவிழா!!

சதய விழாவின் முக்கிய நாளான அக்டோபர் 22 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.