தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்குத் தொடர் விடுமுறை - முழு விபரம்!

 
 டாஸ்மாக்  டாஸ்மாக்

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் பொது விடுமுறை நாட்களை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாகத் தேர்தல் நடத்தை விதிகளின்படி, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரம் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்படும்.  அதன் படி, ஏப்ரல் 21ம் தேதி மாலை முதல் ஏப்ரல் 23 வரையிலான 3 நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.

மே 4ம் தேதி திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று பாதுகாப்பு கருதி மாநிலம் முழுவதும் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.  தேர்தல் மட்டுமின்றி, மத நல்லிணக்கம் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் செயல்படாது. அதன்படி மார்ச் 31ம் தேதி மகாவீர் ஜெயந்தியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைத் தடுக்க, பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி மது விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பார்ப் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.