பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் காலமானார் - திரையுலகினர் இரங்கல்!
Aug 16, 2026, 20:40 IST
'ஆன் கோல்டன் பாண்ட்' உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் மார்க் ரைடெல் தனது 97-வது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த மார்க் ரைடெல், வயது மூப்பு காரணமாக ஏற்பாட்ட உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ஹாலிவுட் திரையுலகச் சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
'த போக்ஸ்', 'த ரீவர்ஸ்', 'ஆன் கோல்டன் பாண்ட்' உட்படப் பல அழுத்தமான படைப்புகளை இயக்கி உலகளவில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர். குடும்ப உறவுகளின் உணர்வுகளை ஆழமாகப் பேசிய 'ஆன் கோல்டன் பாண்ட்' திரைப்படத்திற்காக அவர் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுப் பரிந்துரையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
