போதை ஆசாமிகள் தாக்கியதில் ஊர்க்காவல் படை உயிரிழப்பு.. தமிழகத்தில் அதிகரிக்கும் வன்முறை!

 
போதை ஊர்காவல் படை

அரியலூரில் பொது இடத்தில் மது அருந்திய போதை ஆசாமிகளைத் தட்டிக்கேட்ட ஊர்க்காவல் படை வீரர், அவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவர், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் பொது இடத்தில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

பொது இடத்தில் இடையூறாக மது அருந்துவதைத் தட்டிக்கேட்டு வெங்கடேசன் எச்சரித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த போதை நபர்கள், வெங்கடேசனுடன் கடுமையான தகராறில் ஈடுபட்டு அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

போதை ஆசாமிகளின் தாக்குதலில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31-ஆம் தேதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இச்சம்பவம் தொடர்பாக அரியலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஊர்க்காவல் படை வீரரைத் தாக்கிக் கொலை செய்த போதை ஆசாமிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பொது அமைதியைப் பாதுகாக்க முயன்ற ஊர்க்காவல் படை வீரர் போதை ஆசாமிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.