கொடூரம்... தம்பியை 9 துண்டுகளாக வெட்டி கழிவறை தொட்டியில் வீசிய அண்ணன்!

 
கொலை கொலை

மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில், உடன்பிறந்த தம்பியை அண்ணனே கோடரியால் துண்டு துண்டாக வெட்டிக் கொன்று கழிவறைத் தொட்டிக்குள் வீசியுள்ள சம்பவம் நாடு முழுவதையும் அதிர வைத்துள்ளது.

இறந்தவர் ஆஷிஷ் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும் இவரது அண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அண்ணன் கோடரியை எடுத்து ஆஷிஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

கொலை செய்ததோடு நில்லாமல், பிடிபடாமல் இருப்பதற்காகத் தம்பியின் உடலை 9 துண்டுகளாக அண்ணன் வெட்டியுள்ளார். பின்னர் அந்தத் துண்டுகளைச் சாக்குகளிலும் துணிகளிலும் சுற்றி, வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைத் தொட்டிக்குள் வீசி மறைத்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராதபடி, கடந்த 6 நாட்களாக அதே வீட்டிலேயே அந்தப் பாதகன் வசித்து வந்துள்ளார்.

6 நாட்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் வீட்டைச் சோதனை செய்தபோது, கழிவறைத் தொட்டிக்குள் இருந்து சிதைந்த நிலையில் ஆஷிஷின் சடலத்தைக் கண்டெடுத்தனர். இதையடுத்து அந்தச் சண்டாள அண்ணனைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

குற்றவாளி எதற்காக இவ்வளவு கொடூரமான செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரத்த பந்தத்திற்குள் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை உறைய வைத்துள்ளது.