கொடூரம்... HIV பாதித்த பெண் ஊழியர் பலாத்காரம் - பெண்ணுறுப்பில் இரும்புக்கம்பி நுழைத்து சித்ரவதை!

 
பாலியல் வன்கொடுமை பலாத்காரம் மனைவி தகராறு தம்பதி சண்டை பாலியல் வன்கொடுமை பலாத்காரம் மனைவி தகராறு தம்பதி சண்டை

ஆந்திர மாநிலம் மாசெர்லா பகுதியில் தனியாக வசித்து வந்த 35 வயது மதிக்கத்தக்க அரசு பெண் ஊழியர் ஒருவர், அடையாளம் தெரியாத மர்ம நபரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுச் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், குடிக்கத் தண்ணீர் கேட்பது போல் பாசாங்கு செய்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அந்த நபர் அப்பெண்ணைக் கட்டிப்போட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

தனக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதைக்கூறி, தன்னை விட்டுவிடுமாறு அப்பெண் அந்த நபரிடம் கதறி அழுதுள்ளார். இருப்பினும், அந்த நபர் அதைக் பொருட்படுத்தாமல் அப்பெண்ணை மிகக்கொடூரமாகத் தாக்கியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, அப்பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக்கம்பியைச் செலுத்தி அந்த நபர் மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளார். இதில் அந்தப் பெண் நிலைகுலைந்து போனார். பின்னர் அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த அப்பெண், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளியைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

பலாத்காரம் பாலியல் சிறுமி

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், குற்றவாளி விரைவில் பிடிபடுவார் எனத் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரச் செயல்கள் அதிகரித்து வருவது ஆந்திராவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.