பட்டப்பகலில் கொடூரம்... மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்!

 
திருவண்ணாமலை போலீஸ் போலீசார் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஊசாம்பாடி கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை, அவரது மருமகனே பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊசாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மருமகனுக்கும் அவரது மாமனாருக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மருமகன் பொதுமக்கள் முன்னிலையிலேயே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாமனாரைக் கொடூரமாக வெட்டியுள்ளார்.

திருவண்ணாமலை போலீஸ் போலீசார் கொலை

மாமனாரை வெட்டிச் சாய்த்த பிறகு, அந்த மருமகன் தனது பைக்கில் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனடியாகச் செயல்பட்டு தப்பியோட முயன்ற மருமகனைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்ட நபருக்குத் தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், அவரை உடனடியாகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், காயமடைந்த மாமனாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.