நள்ளிரவில் கொடூரம்... மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு கணவன் தப்பியோட்டம்!

 
கள்ளக்காதல் கள்ளக்காதல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக நள்ளிரவில் மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கணவன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்கு ஹசீனா பீவி (36) என்ற பெண்ணுடன் திருமணமாகி, இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தனது மனைவி ஹசீனா பீவியின் நடத்தை மீது சுரேஷ்குமாருக்குத் தீராத சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

வழக்கம் போல நேற்று நள்ளிரவும் இவர்களுக்குள் மீண்டும் சந்தேக விவகாரம் தொடர்பாகப் பெரிய அளவில் வாக்குவாதம் வெடித்துள்ளது. விடிய விடிய நீடித்த இந்த சண்டை, நள்ளிரவு சுமார் 2 மணியளவில் எல்லை மீறியது.

இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சுரேஷ்குமார், வீட்டில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து வந்து, தன் மனைவி ஹசீனா பீவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹசீனா பீவி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்து விட்டதை உறுதி செய்துக் சென்கொண்ட சுரேஷ்குமார், உடனடியாக வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

கள்ளக்காதல்

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வட்டியூர்காவு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஹசீனா பீவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய கணவர் சுரேஷ்குமாரைத் தேடிக் தனிப்படை அமைத்துத் தீவிர வலை வீசியுள்ளனர். தந்தை தலைமறைவாகி உள்ள நிலையில், தாயை இழந்தும் தவிக்கும் 4 குழந்தைகளின் நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.