கொடூரம்... பூனையை 12-வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்ற நபர்!
சென்னையில் பூனை ஒன்றை 12-வது மாடியில் இருந்து கீழே தள்ளிக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொடூரச் செயலின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12-வது மாடியில் இருந்து, நபர் ஒருவர் பூனையைத் இரக்கமின்றி கீழே தள்ளிக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை யாரோ வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீ போல் பரவி நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் இக்கொடூரச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அப்பாவி விலங்கின் மீது இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்திய நபரைக் கண்டறிந்து, விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
