பிக் பாஸ் செட்டில் பயங்கர விபத்து... 20 அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞர் படுகாயம்!

 
பிக் பாஸ் 8
 

 


ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக 8வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் கை, கால், இடுப்பு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8வது சீசன் வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குவதில் இருந்து விலகியுள்ள நிலையில், முதன்முறையாக நடிகர் விஜய்சேதுபதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். 

ஆம்புலன்ஸ்

நடிகர் விடிவி கணேஷ், தீபக், செந்தில் உட்பட பலரது பெயர்கள் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அடிபடுகிறது. போட்டியாளர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் நிகழ்ச்சி துவங்கும் தினம் அன்று தெரிய வரும்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீடு அமைக்கும் பணிகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷாகின் கான் எனும் இளைஞர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் கை, இடுப்பு எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நடிகர் கார்த்தி நடித்து வந்த படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்று ஓரிரு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் ஓர் விபத்து போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச போலீஸ்

கோடிகளில் செலவு செய்து, கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள், தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து அக்கறைக் கொள்வதில்லை என்றும், இதையெல்லாம் திரைப்பட தொழிலுக்கென தனி அமைச்சராக இருப்பவரும் கண்டுக்கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web