தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து; 21 பேர் பலியான துயரம்!
Sep 16, 2026, 07:43 IST
தென் ஆப்பிரிக்காவில் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து பல வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் மேற்கு கேப் மாகாணம் பிரின்ஸ் ஆல்பர்ட் மற்றும் லியு கம்கா நகர் இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் நேற்று இரவில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதன் காரணமாகச் சாலையில் பின்னால் வந்த மற்ற வாகனங்களும் நிறுத்த முடியாமல் அடுத்தடுத்து மோதிப் பயங்கரத் தொடர் விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
