லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து.. கள்ளக்காதலன், காதலி பரிதாப பலி.. விசாரணையில் அதிர்ச்சி!

 
அனுஜா - ஹாசிம்

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (36). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அனுஜா பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் அருகே தும்பமண் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருக்கும், அருகில் உள்ள சரும்மூடு பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் முகமது ஹாசிம் (35) என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அனுஜாவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனால் இவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அனுஜா, சக ஆசிரியர்களுடன் பேருந்தில் திருவனந்தபுரத்துக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்து இரவு அனைவரும் ஊருக்கு திரும்பினர். நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் அடூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே காரை நிறுத்தி, பேருந்தை மறித்துள்ளார் ஹாசிம். பஸ் நின்றவுடன் அனுஜாவை கீழே இறங்கச் சொன்ன ஹாஷிம் பஸ்ஸில் ஏறினார். முதலில் அனுஜா செல்ல மறுத்தாலும், பின்னர் அனுஜா பேருந்தை விட்டு இறங்கி அவருடன் காரில் சென்றார். அப்போது, அனுஜா சக ஆசிரியர்களிடம், ஹாசிம் தனது மாற்றாந்தந்தையின் மகன் என்று கூறியுள்ளார்.

அனுஜா காரில் ஏறிய சிறிது நேரத்தில் அடூர் பட்டாசிம்கு என்ற இடத்தில் லாரி மீது கார் மோதியது. அதிக வேகம் காரணமாக கார் கவிழ்ந்தது. உடனே அங்கிருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் காரில் இருந்த இருவரை வெளியே எடுக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் மிகுந்த சிரமத்துடன் மீட்டனர். ஆனால் அதற்குள் அனுஜா பரிதாபமாக இறந்தார். ஹாசிம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து குறித்து அடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் இது தற்செயலாக நடந்த விபத்தாக இருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால், காவல்துறையினரின் தீவிர விசாரணையில், ஹாசிம் வேண்டுமென்றே காரை லாரி மீது மோதியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. கார் அதிவேகமாக சென்றதால் காரின் முன்பக்க கதவு பலமுறை திறந்து அனுஜாவின் கால் வெளியே தெரிந்ததாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அனுஜாவைக் கொல்ல ஹாசிம் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web