ராணுவ தளத்தில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் பலி... கனடாவில் சோகம்!

 
கனடா ஆம்புலன்ஸ்

வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் உள்ள வைன்ரைட் நகரில் ராணுவ தளம் இயங்கி வருகிறது. இந்தத் தளத்தில் ராணுவ வீரர்களுக்குப் பல்வேறு கட்டப் பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வைன்ரைட் நகரில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தில் திடீரெனப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 

இந்தக் கோர விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இருபதிற்கும் மேற்பட்டோர் கடுமையான காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

ராணுவ வீரர்கள் குண்டு வீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இயற்கை எரிவாயுக் குழாய் மீது வெடிகுண்டு விழுந்து வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த பயங்கர வெடி விபத்து குறித்து உயர்மட்ட அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.