ரிசார்ட் வாசலில் விபரீதம்... காதலியை கத்தியால் குத்திக் கிழித்த காதலன்... கேரளாவில் பயங்கரம்!

 
இளம்பெண் காதலி காதல் படுகொலை காதல் தோல்வி மரணம் வெட்டிப்படுகொலை வெட்டிக்கொலை

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணிபுரிந்த இளம் பெண் ஒருவர், காதல் தோல்வி காரணமாக அவரது நண்பரால் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி மாராமண் பகுதியில் உள்ள பிரபல ரிசார்ட்டில் குளத்துப்புழையைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் தின்ஷா வரவேற்பாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் அங்கு பணியில் சேர்ந்து இரண்டு வாரங்களே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை படுகொலை வெட்டிக்கொலை

தின்ஷாவின் நண்பரான கீழ்ஊகரையைச் சேர்ந்த ஜித்து என்பவர் ரிசார்ட்டிற்கு வந்துள்ளார். மிகவும் இயல்பாகப் பேசுவது போல் தின்ஷாவை வெளியே அழைத்துச் சென்று பேசிய அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

தின்ஷா காதலிலிருந்து பின்வாங்கியதால் ஏற்பட்ட ஆத்திரமும், பழிவாங்கும் நோக்கமுமே இக்கொலைக்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தின்ஷாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்களும் பொதுமக்களும் பலத்த காயமடைந்த தின்ஷாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்தார். தப்பியோட முயன்ற ஜித்துவை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கோயிப்ரம் போலீசார் அவரைக்கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.