பெங்களூருவில் கொடூரம்... காதலனின் கை, கால்களைக் கட்டி தீவைத்துக் கொன்ற காதலி!

 
காதலன் கொலை காதலன் கொலை

பெங்களூருவில் தன்னைத் தவிர்க்க முயன்ற காதலனை, விசித்திரமான முறையில் காதலை வெளிப்படுத்துவதாக நம்பவைத்து, கட்டிப்போட்டு எரித்துக் கொன்ற 27 வயது இளம்பெண் பிரேமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் வசித்து வந்த கிரண் (27) மற்றும் பிரேமா (27) ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சமீபகாலமாக கிரண், பிரேமாவைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரேமா, கிரணைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

கடந்த ஏப்ரல் 20 அன்று கிரணைத் தனது வீட்டிற்கு வரவழைத்த பிரேமா, "மேற்கத்திய பாணியில் வித்தியாசமாகக் காதலை வெளிப்படுத்தப் போகிறேன்" என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய கிரணின் கண்கள், கை மற்றும் கால்களைத் துணியால் கட்டிப்போட்டுள்ளார். கிரண் தன்னை முழுமையாக நம்பிய நிலையில், அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்ததோடு மட்டுமல்லாமல், கிரண் தீயில் துடிப்பதையும் பிரேமா தனது செல்போன் கேமராவில் வீடியோ எடுத்துள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

கிரணின் மரணம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றினர். பிரேமாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரது செல்போனை ஆய்வு செய்தபோது கொலைச் சம்பவம் முழுவதையும் அவர் வீடியோ எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

“அவர் என்னை விட்டுப் பிரிவதைத் தாங்க முடியாமல் தான் இந்தக் கொலையைச் செய்தேன்” என விசாரணையில் பிரேமா ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.