ஆரணி அருகே கொடூரம்.... கிணறு தோண்டிய போது மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி!

 
கிணறு மண் சரிந்து

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகிலுள்ள கஸ்தம்பாடி பகுதியில் கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. நேற்று பெய்த கனமழையால் நிலத்தில் ஈரம் அதிகரித்திருந்ததே திடீர் மண் சரிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆரணி

எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில் செல்வமணி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இரு தொழிலாளர்கள் மண்ணில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி உடனடியாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.