திருப்பத்தூரில் பட்டப்பகலில் பயங்கரம்... கள்ளக்காதல் விவகாரத்தில் இரட்டைக் கொலை!

 
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் உள்ள காலி வீட்டுமனை பகுதிக்கு நேற்று மதியம் காரில் வந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் மர்ம நபரால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர்

விசாரணையில் உயிரிழந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ப.முத்தம்பட்டியைச் சேர்ந்த மாலினி (30) எனத் தெரியவந்தது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சஞ்சீவ் காந்தி என்பவரை 8 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். மாலினியுடன் பழக்கத்தில் இருந்த சஞ்சீவ் காந்தி, ரஞ்சித்குமாருடன் மாலினி நெருக்கமாக இருந்ததை அறிந்து ஆத்திரத்தில் இருவரையும் பின்தொடர்ந்து சென்று வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.