குதிரை பேர வழக்கு.. 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு!

 
குதிரை பேர வழக்கு கரூர்

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் ஜாமீன் மனுக்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், சீனிவாசன், செல்வன், ராஜசேகர், சேதுராஜ் மற்றும் கணேசன் ஆகிய 8 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

தவெக பேரம் செந்தில்பாலாஜி

வழக்கு விசாரணையின் போது, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு 8 பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் கடும் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்தது, 8 நபர்களின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. இவ்வழக்கு தொடர்பான தீவிர விசாரணைகளைக் காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.