குதிரை பேர வழக்கு... மேலும் 2 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்!

 
குதிரை பேர

தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மேலும் இரண்டு பேருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில், காவலில் உள்ள மேலும் 2 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.

குதிரை பேர வழக்கு கரூர்

இந்த பரபரப்பான குதிரை பேர வழக்கின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 14 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும், பின்னணியில் உள்ள அமைப்புகள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.