நாளை முதல் வீடு, வீடாக மகளிர் உரிமைத் தொகை டோக்கன் விநியோகம்!!

 
உரிமை தொகை

மாதம் தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ரூ1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்பட்ட உள்ளது. இதற்காக கள ஆய்வுப் பணிகளுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக  நாளை ஜூலை 20ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன், விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலைஞர், மகளிர் உரிமைத்தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் நாளை முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் பணி நாளை முதல் தொடங்கப்படும்.   யார் எந்த நாளில் முகாமில் பங்கேற்பது குறித்த  தகவல்கள் படிவத்தில் இருக்கும் எனவும், முகாம் நடக்கும் இடம் குறித்து ரேஷன்  கடைகளில் தமிழில் பலகை வைக்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு  அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உரிமை தொகையை பெறுவதற்கு  எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக்கூடாது என   தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகம் முழுவதும் 1கோடி மகளிருக்கு  மாதம் ரூ.1000  மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   இத்திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை

இதன் அடிப்படையில், சென்னை தலைமைச்செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில், இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவது குறித்து  ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து சிவதாஸ் மீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில்  கலைஞர் மகளிர் உரிமை திட்ட அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகள், நடவடிக்கைகள் கண்காணித்து உறுதி செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் தகுதிகள் மற்றும் தகுதியின்மை, விண்ணப்பிக்கும் நடைமுறைகள், பொருளாதார தகுதிகள் இவைகளுக்கேற்ற படி பயனாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.  

மகளிர் உரிமை தொகை

இதன்படி  கால அட்டவணை, திட்டமிடுதல் ஒருங்கிணைத்தல் மற்றும் செயலாக்கம், கட்டுப்பாட்டு அறை, தகவல் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், முகாம்களை ஏற்பாடு செய்தல், முகாம் இடங்கள் தேர்வு, முகாம் நடைபெறும் நேரம் மற்றும் நாட்கள், உடனடியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்தல், முகாம்களில் அடிப்படை வசதிகள், விண்ணப்பதாரர் காத்திருக்கும் அறைகள், பயோமெட்ரிக் சாதனங்களை பெற்றுச் சரிபார்த்தல், பகிர்ந்தளித்தல், விண்ணப்பங்கள் பெறுதல் சரிபார்ப்பு மற்றும் பகிர்ந்தளித்தல், கூட்ட நெரிசல் தவிர்ப்பு ஏற்பாடுகள், காவல்துறை பாதுகாப்பு, நிழற்கூடங்கள், குடிநீர் வசதிகள், மின்சார வசதி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளக்கான வசதிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான வசதிகள், தீத்தடுப்பு ஏற்பாடுகள் என  அனைத்து நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட  வேண்டும் என  அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 19ம் தேதி புதன்கிழமை  முதல் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமைத்திட்டதிற்கான கள ஆய்வு பணிகள்  மேற்கொள்ளப்படும். கண்காணிப்பு அலுவலர்கள் எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபடாத வகையில்   செயல்பாடுகள், பணி முன்னேற்றம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web