பெரும் அதிர்ச்சி... சீட்டுக்கட்டு போல் மளமளவென சரிந்த வீடுகள்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிவானந்தா காலனி சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 அடுக்கு மாடி வீடுகள் இருந்தன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்பட்டது. சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார். இருப்பினும் பொருட்கள் அந்த வீட்டிலேயே இருந்தது சுரேஷ் அப்போது வீட்டிற்கு வந்து சென்றார். இதில் நள்ளிரவு நேரத்தில் அந்த 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டுக்கட்டு போல சரிந்து கீழே விழுந்தது.
இதனையடுத்து அருகே இருந்த 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீட்டுக்குள் இருந்த டிவி, பீரோ உட்பட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது. குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்று வீடு வழங்கப்படும் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!