இல்லத்தரசிகள் மகிழ்ச்சி... ஒரே நாளில் இருமுறை சரிந்த தங்கம் விலை!

 
தங்கம் தங்கத்தின்

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை அதிரடியாகக் குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலையில் இந்த திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்று காலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் மேலும் அதிரடியாக ரூ.960 சரிந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாகச் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.

தங்கம்

தற்போதைய நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,09,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் தங்கம் ₹13,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டபோதிலும், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ₹245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,45,000-க்கும் தொடர்ந்து விற்பனையாகி வருகிறது.