ஏமனில் ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹவுதி ஏவுகணைத் தாக்குதல்: 73 பேர் பலி!
ஏமனின் தெற்கு பகுதியில் உள்ள ஷப்வா மாகாணத்தில், அரசு படைகளின் அல்-ஆலம் ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
புதிய வீரர்கள் பயிற்சிக்காக அணிவகுத்து நின்றபோது, முகாம் மீது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட புதிய வீரர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிலர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி தரப்பு பொறுப்பேற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏமன் அரசுப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் உயிரிழப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.
