ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - பாதுகாப்புப் படையினர் 30 பேர் பலி!

 
ஏமன் ஹவுதி

ஏமனில் அரசுப் படைகளைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில், ராணுவ வீரர்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏமனின் முக்கிய மாகாணங்களான மரிப் மற்றும் ஹத்ரமவுத் பகுதிகளில் அமைந்துள்ள அரசு ராணுவ முகாம்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிநவீன ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தச் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் திடீர் வான்வழித் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குறைந்தது 30 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தாக்குதலின் பின்னணி குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.