இஸ்லாமியர்களின் புனித மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் முயற்சி - சவுதி வான் பாதுகாப்புப் படைகள் முறியடிப்பு!

 
மெக்கா

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய திடீர் டிரோன் தாக்குதல் முயற்சியைச் சவுதி வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்துத் தகர்த்துள்ளன.

இஸ்லாமியர்களின் மிகப் புனிதமான நகரமான மெக்காவை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலுக்காக டிரோன்களை ஏவினர். மெக்காவை நோக்கி வந்த அந்தத் தாக்குதல் டிரோன்களைச் சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படைகள் உடனடியாகக் கண்டறிந்து நடுவானிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன.

மெக்கா

புனித ஸ்தலத்திலுள்ள வழிபாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் சூழலால் மேற்காசியாவில் ஏற்கனவே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.