மெக்கா மீது தாக்குதல் நடத்தப்படவில்லை - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மறுப்பு!
Sep 16, 2026, 18:20 IST
இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரசு கூறிய குற்றச்சாட்டை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளனர்.
சவுதியின் ராணுவ தளங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீதே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், புனித தலங்கள் எவை மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யாஹியா தெரிவித்துள்ளார்.

ஹவுதி அமைப்பினர் மறுப்பு தெரிவித்திருந்தாலும், மெக்காவை நோக்கி வந்த ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் நடுவழியிலேயே வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபியா தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
