சவுதி F-15 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? ஹவுதிகள் வெளியிட்ட வீடியோ!
யேமனின் மரீப் மாகாண வான்பரப்பில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சவுதி அரேபியாவின் F-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக ஹவுதி தரப்பு வெளியிட்டுள்ள சுமார் 4 நிமிட காணொலியில், விமானம் தாக்கப்படுவது போன்ற காட்சிகளும், பின்னர் பாலைவனப் பகுதியில் விமானத்தின் பாகங்கள் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவே தங்களது கூற்றுக்கு ஆதாரம் என ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.
ஹவுதிகளின் கூற்றுப்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பயன்படுத்தி விமானம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விமானம் உண்மையில் வீழ்த்தப்பட்டதா என்பது குறித்து சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இதனால், ஹவுதிகள் வெளியிட்ட வீடியோ மற்றும் அவர்களின் கூற்று மட்டுமே தற்போது வெளியாகியுள்ள முக்கிய தகவல்களாக உள்ளன.யேமனில் ஹவுதிகள் மற்றும் சவுதி தலைமையிலான படைகளுக்கு இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
