"200 யூனிட் இலவசம்னு சொல்லிட்டு 4 மடங்கு மின்கட்டணம் உயர்ந்தது எப்படி?" - சீமான் ஆவேசம்!

 
சீமான்விஜய் விஜய்சீமான்

200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு, தற்போது பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டது மற்றும் பழுதான மீட்டர்களை மாற்றாததே கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். 200 யூனிட் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

சீமான்,விஜய்

தாமதமான அளவீட்டால் மின் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேல் அதிகரித்து, இலவச மின்சாரத்தின் பயன் கிடைக்காமல் போனதோடு, ஒரு யூனிட்டிற்கான கட்டண விகிதமும் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. தேர்தல் அறிக்கையில் மாதம் 200 யூனிட் இலவசம் எனக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் என்றும், அதுவும் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மட்டுமே என்றும் மாற்றி அறிவித்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.

மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், மின்னிலக்க மீட்டர்களை விரைந்து பொருத்த வேண்டும்.

மின் கணக்கீட்டுக் குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்போது உயர்ந்துள்ள கூடுதல் மின் கட்டணத்தை அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.