பெண்கள் அரசு பேருந்துகளில் எவ்வளவு தூரம் இலவசமாக பயணிக்கலாம்? முழு விவரம்!

 
மகளிர் பேருந்து சிறப்பு

தமிழ்நாட்டில் பெண்களின் இலவசப் பேருந்து பயணம் தொடர்பான புதிய 'வெற்றிப் பயணத் திட்டம்' இன்று முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியில் சாதாரண நகர பேருந்துகளில் மட்டும் நடைமுறையில் இருந்த இலவசப் பயணம், தற்பொழுது எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 12,692 அரசு பேருந்துகளில் பெண்களும், திருநங்கைகளும் முற்றிலும் இலவசமாகப் பயணிக்கலாம்.

பெண்கள் மகளிர் பேருந்து பிரியதர்ஷினி

அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பொதுவாக 30 முதல் 100 கி.மீ. வரை இயக்கப்படுவதால், பயணிகள் இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்தி நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி வரை வெவ்வேறு எக்ஸ்பிரஸ் பேருந்துகளை மாற்றி மாற்றி இலவசமாகப் பயணிக்கலாம்.

பேருந்து

மேலும், திருச்சி - திண்டுக்கல், தஞ்சாவூர் - நாகப்பட்டினம், கோவை - பழனி, ஈரோடு - சேலம், மதுரை - விருதுநகர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களிலும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் கட்டணமின்றிச் பயணிக்கலாம்.

இத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 84 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்றும், 16 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒரு வழிப் பயணங்கள் மேற்கொள்ள இது வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.