கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் புதிய பட்டதாரிகளுக்கு வேலை?
கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பெறுவது புதிய பட்டதாரிகளுக்கு சவாலானதாக இருந்தாலும், முறையான திட்டமிடல் மற்றும் திறன் வளர்ப்பின் மூலம் அந்த வாய்ப்பைப் பெற முடியும்.
இந்த நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. கல்லூரிகளில் நடைபெறும் வளாக நேர்காணல்கள், பயிற்சிக்கால வேலைவாய்ப்புகள் (Internship) மற்றும் வளாகத்திற்கு வெளியே நடைபெறும் நேரடி பணியமர்த்தல் செயல்முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, தரவு அமைப்புகள் (Data Structures), அல்காரிதம்கள் (Algorithms) மற்றும் நிரலாக்கத் திறன்களில் (Programming Skills) நல்ல தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தொழில்நுட்ப அறிவுடன், நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இத்தகைய முன்னணி நிறுவனங்களில் பணிக்குத் தேர்வாகும் புதிய பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.26 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை ஊதியத் தொகுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, மாணவர்கள் கல்லூரிப் படிப்பின்போதே தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்வது வேலைவாய்ப்பைப் பெற உதவும்.
