நல்லகண்ணு உடல்நிலை எப்படியிருக்கு?! அதிதீவிர சிகிச்சை - மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

 
நல்லகண்ணு

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு (101) அவர்களுக்கு, தற்போது அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் ஆகிய பாதிப்புகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. குறிப்பாக, நேற்று முன்தினம் அவரது உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

நல்லக்கண்ணு

சுவாசிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவருக்கு 'வென்டிலேட்டர்' எனப்படும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்படும் மருந்துகளின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினரின் நேரடிக் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையைச் சீராக்கத் தேவையான அனைத்து அதிதீவிர முயற்சிகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லக்கண்ணு

வயது முதிர்வு மற்றும் பல்வேறு உறுப்புச் செயலிழப்பு சவால்கள் இருந்தபோதிலும், 101 வயதான நல்லகண்ணு அவர்கள் அந்த மன உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். அவரது உடல்நிலையைச் சீராக்கத் தமிழக அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகம் முழு வீச்சில் பணியாற்றி வருகிறது.