ஆதாரை டவுன்லோட் செய்ய எளிதான வழி! இனி பத்திரமா வச்சுகோங்க!!

 
ஆதாரை டவுன்லோட் செய்ய எளிதான வழி! இனி பத்திரமா வச்சுகோங்க!!

UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பயனாளர்கள் தங்கள் ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானல் பதிவிறக்கம் செய்யலாம்

ஆதாரை டவுன்லோட் செய்ய எளிதான வழி! இனி பத்திரமா வச்சுகோங்க!!

இந்தியாவில் வசிக்கும் குடிமக்கள் அனைவரும் ஆதார் வைத்திருப்பதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அரசின் நலத்திட்டங்களில் தொடங்கி, வங்கி பரிவர்த்தனைகள், காப்பீடு திட்டங்கள், வாகனம் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல சேவைகளில் ஆதார் முக்கிய ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் நமது சுயவிவரங்களுடன் சேர்த்து, ஒவ்வொரு நபருக்குமான தனித்த ஆதார் எண், பார்கோடு, க்யூ ஆர் கோடு போன்றவையும் அச்சடிக்கப்பட்டிருக்கும். இன்றைய நாளில் அரசாங்க அடையாள அட்டைகளுக்கு பதிலாக சில இடங்களில் நாம் ஆதாரை பயன்படுத்திக் கொள்ள முடியும். சில இடங்களில் சம்பந்தபட்ட அலுவலகங்களே, முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டையை கேட்கின்றனர்.

எனவே, ஆதார் அட்டையை ஒவ்வொரு மனிதனும் கையில் வைத்திருப்பது அத்தியாவசியமாகிறது. அதை எளிமைப்படுத்தும் வகையில் UIADI பயனாளர்கள் ஆதார் கார்டை நேரடியாக பதிவிறக்கம் செய்ய அனுமதித்துள்ளது. இதன் மூலம் இப்போது ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே நினைத்த நேரத்தில் ஆதார் கார்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேவைப்படும் போது சேமித்து வைத்த பிடிஎஃப் பைலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆதாரை டவுன்லோட் செய்ய எளிதான வழி! இனி பத்திரமா வச்சுகோங்க!!

eaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆதார் அட்டையை நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம். அதில், முழுமையான ஆதார் எண்ணைக் காட்டும் ரெகுலர் ஆதார், கடைசி இலக்கங்களை காட்டும் மாஸ்க்டு ஆதார் என்ற இரு சேவைகளில் நமக்குத் தேவையான விருப்பத்தை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இணையதளத்தில் ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி?

1 eaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Download Electronic Copy of Your Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

2 அதன்பின் வரும் ஸ்கிரீனில் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

3 மாஸ்க்டு ஆதார் அட்டை விருப்பத்துக்கு I want a Masked Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

4 அதன் பின் Send OTP ஆப்ஷனை கிளிக் செய்தால், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.

5 உங்கள் OTP ஐ உள்ளிட்டு, Submit ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

6 OTP வெற்றிகரமாக அங்கீகாரமான பிறகு ஸ்கிரீனில் வரும் Download Aadhaar ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆதாரின் PDF பதிப்பு பதிவிறக்கமாகிவிடும்.

எதிர்கால தேவைக்கு, ஆதாரின் PDF பதிப்பை தொலைபேசி அல்லது கணினியில் சேமித்து வைத்திருப்பது நமது நேரத்தை மிச்சப்படுத்தும்.

From around the web