TNPSC குரூப் 2, 2ஏ ஹால் டிக்கெட் வெளியீடு - பதிவிறக்கம் செய்வது எப்படி?!

 
tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

tnpsc டிஎன்பிஎஸ்சி அரசு

தேர்வர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குரூப் 1 தேர்வு

இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு முகப்பில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு நெருங்கிவரும் நிலையில், தேர்வர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.