வீட்டில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எளிமையாக வழிபடுவது எப்படி? - இந்த விஷயங்களை மிஸ் பண்ணாதீங்க!

 
நாளை சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் இது தான்!

வீட்டில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையைத் தூய்மையான முறையில் எளிய வழிமுறைகளைப் பின்பற்றிச் சிறப்பாகக் கொண்டாடலாம்:

பூஜைக் அறையை அல்லது பூஜை செய்யும் இடத்தை நன்றாகத் துடைத்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய மேஜை அல்லது பீடத்தில் கலைமகள் சரஸ்வதி தேவியின் படத்தை வைத்து, அதற்கு அருகம்புல் மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலர் மாலைகள் அணிவிக்க வேண்டும்.

துர்கா லட்சுமி சரஸ்வதி

படத்தின் முன்பாகக் கல்விப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் தொழில் ரீதியாகப் பயன்படுத்தும் முக்கியமான உபகரணங்களைச் சுத்தப்படுத்தி அழகாக அடுக்கி வைக்க வேண்டும். படத்தின் முன் சுத்தமான வாழை இலை விரித்து, அதில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், பொரி, கடலை மற்றும் அவல் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.

ஆயுதபூஜை சாமி படையல் கடவுள்

நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி, மனதாரக் கற்பூர ஆரத்தி காட்டி வழிபட வேண்டும். மறுநாள் காலையில் வழக்கம்போல புதிதாக இலை போட்டு, மீண்டும் வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் பொரி படைத்துச் சிறிய அளவில் வழிபாடு செய்து பூஜையை நிறைவு செய்யலாம். அதன்பிறகு புத்தகங்களையும் படங்களையும் உரிய இடங்களில் எடுத்து வைக்கலாம்.