”நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்”.. உடனே கல்வி கடனை வழங்கிய மாவட்ட ஆட்சியர்..!!
Updated: Nov 18, 2023, 19:49 IST

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் முகாமில், தேம்பித் தேம்பி அழுத இருவருக்கு ஆறுதல் தெரிவித்த ஆட்சியர், உங்களுக்கு இங்கேயே இப்போதே கல்விக் கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்...
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய இம்முகாமை, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் 50-க்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்விக் கடனுக்கான காசோலையை வழங்கினார்.
நிறைவாக, வறிய நிலையில் வாழும் தனக்கு கச்சிராபாளையத்தில் உள்ள வங்கியில் கடனுதவி வழங்க மறுக்கிறார்கள் என்று கண்ணீருடன் கூறிய நபருக்கும், ஆதரவற்ற நிலையில் வாழும் எனது மகளை உயர்கல்வி படிக்க வைக்க கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று தேம்பித் தேம்பி அழுத எறையூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் ஆறுதல் தெரிவித்த ஆட்சியர், இருவருக்கும் இங்கேயே இப்போதே கடனுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
From around the
web