பெரும் பரபரப்பு.. இளைஞர் மீது ஆசிட் வீச்சு.. திருமணமான பெண் ஆத்திரம் !!

 
ஆசிட்

ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் கார்த்திக் (26). இவர், நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டூவீலரில் வந்து, தன் மீது ஆசிட் வீசப்பட்டதாக கூறினார். ஊழியர்கள் பார்த்த போது தலை மற்றும் உடலில் ஆசிட் பட்டு கருகி இருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் முதலுதவி அளித்த நிலையில், பின்னர் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கார்த்திக்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த தகவலை மருத்துவமனை தரப்பில் இருந்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆசிட்

அதன்பேரில் மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்ட கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

ஆசிட்

திருமணமாகாத கார்த்திக்கிற்கும், அவரது நெருங்கிய உறவினரான 27 வயது திருமணமான பெண்ணுக்கும் தொடர்பு இருந்துள்ளது. அதேவேளையில், கார்த்திக் வேறொரு பெண்ணையும் காதலித்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்து, உறவுக்காரப் பெண் அவர் மீது ஆசிட் வீசியுள்ளார். இந்த நிலையில் இளைஞர் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை பவானி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web