1,75,025 இந்தியர்களுக்கு அனுமதி... ஹஜ் பயணத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!

 
மெக்கா

இஸ்லாம் சகோதர சகோதரிகளின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாக கருதப்படுவது ஹஜ் பயணம். இவர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு தடவையாவது ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மெக்காவுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்துக்காக தங்கள் நாட்டுக்கு வரும் மக்களுக்கான புதிய விதிமுறைகளை சவூதி அரேபியா அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடும்  குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அனுமதி அளித்து  வருகிறது. ஆனால், கடுமையான வெயில், கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் மெக்காவில் ஹஜ் பயணமாக வரும் பக்தர்களின் உயிரிழப்பு ஒவ்வொரு ஆண்டும்  அதிகரித்து வருகிறது.

ஹஜ்

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 2025ம் ஆண்டு ஹஜ் பயணத்தின்போது, யாத்ரீகர்களுடன் குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும்போது இதுவரை புனித யாத்திரை மேற்கொள்ளாதவர்களுக்குதான் முன்னுரிமை வழங்கப்படும்.
சவூதியில் வாழும் மக்களுக்கு நுசுக் தளம் வழியாக விண்ணப்பிக்கும் பணி தொடக்கம்.

ஹஜ்


புதிய விதிமுறைகளை அறிந்துகொண்டு, ஒருவர் தான் மற்றும் தன்னுடர் வருபவர்களுக்கான பதிவுகளை செய்ய வேண்டும்.
உள்நாட்டு யாத்ரீகர்கள் கட்டணத்தை 3  தவணைகளாக செலுத்தலாம். முன்பதிவு செய்த 72 மணி நேரத்துக்குள் 20 சதவீத வைப்புத் தொகையும், ரமலான் மாதம் மற்றும் ஷவ்வால் மாதத்தில் 2 சமமான தொகையை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள 1,75,025 இந்திய யாத்ரிகா்களுக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தத்தை அந்நாட்டு ஹஜ் துறைக்கான அமைச்சா் தெளஃபீக் பின் ஃபாசான் அல் ராபியாவுடன் மத்திய சிறுப்பான்மை விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜ்ஜுவுடன் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!