ஹஜ் பயணிகள் உற்சாகம்... மதுரையிலிருந்து மதீனாவுக்கு நேரடி விமான சேவை!

 
விமானம்

 

சென்னையில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் வசதிக்காகச் சிறப்பு விமானச் சேவைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 2026 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் மூலம் சென்னையில் இருந்து நேரடியாக ஜித்தாவிற்கு ஹஜ் பயணம் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

ஹஜ்

இதன் மூலமாகத் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைத்துப் பயணிகளும் எளிய முறையில் எவ்வித தடையுமின்றி நேரடியாக விமானம் மூலம் புனித யாத்திரை செல்ல முடியும். மேலும் பயணிகளின் வருகை மற்றும் திரும்புவதற்கான அனைத்து வசதிகளும் முறையாகவும் துரிதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தொடர்புடைய அமைப்புகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனிதப் பயணத்திற்குச் செல்லும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் வழங்கி வருகின்றனர்.

ஹஜ்

மறுமார்க்கமாக மதினாவில் இருந்து சென்னைக்கு நேரடியாக ஜூன் 5 ஆம் தேதியில் இருந்து 8 ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் அனைவரும் எவ்வித சிரமமுமின்றி மகிழ்ச்சியாகப் போய் வர வேண்டும் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். புனிதப் பயணம் செல்லவுள்ள பயணிகளுக்கு இந்த நேரடி விமான சேவை அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியையும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது