பாலத்தின் அடியில் மனித தலை.. பார்த்து ஷாக்கான பொதுமக்கள்.. போலீசார் தீவிர விசாரணை!

 
பூவையா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் துண்டிக்கப்பட்ட தலையை கொலையாளிகள் பாலத்தில் வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையை மீட்டு உடலை தேடி வரும் போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே அய்யனார் கோயில் சாலையில் முட்டுப் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமானோர் செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று அதிகாலை, பாலத்தின் ஓரத்தில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் துண்டிக்கப்பட்ட தலையை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன வாட்ச்மேன் பூவையா என்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக அவரை யாராவது கொன்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அவர் உடலின் மற்ற பாகங்களை தேடி வருகின்றனர். பாலத்தின் அருகே தலை துண்டிக்கப்பட்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா