வைரல் வீடியோ!! ஆற்றில் மிதக்கும் நூற்றுக்கணக்கான கார்கள்!!

 
ஆற்றில் மிதக்கும் கார்கள்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல பகுதிகளில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நொய்டா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஹிண்டன் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா மாவட்டத்தில்   காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள்  மூழ்கியுள்ளன. ஆற்றில் நீர் அதிகமானதால் மிகுதியான மழை நீர்  வெளியேற்றப்பட்டது. இதனால்  கர்ஹோ கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது. இதில் ஆதர்ஷ் , கிரிஸ் மிஸ்ரா  இரு  சிறுவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் கார்கள்

இதனையடுத்து அந்தபகுதியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர்  மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  கன்ஹா உப்வான் மற்றும் மோர்டி ஆகிய இடங்களில் உள்ள   மின் துணை மின் நிலையங்கள் எட்டு அடி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.  இந்த நிலையில், நொய்டா எக்கோடெக் என்ற புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கார் ஷோரூம் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான புத்தம் புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இது குறித்த  வீடியோ மற்றும் புகைப்படங்ஙகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. கார்கள் வெள்ளத்தில் மூழ்கியால் கார் ஷோரூம் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web