இடைத்தேர்தலில் சூறாவளி... அதிமுகவின் 40 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

 
எடப்பாடி இபிஎஸ்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

எடப்பாடி

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரவிருக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள அதிமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக அதிமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலுக்குத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடி

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கியத் தரப்புகளுக்கும் இடையே உட்கட்சி கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், இந்த நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.