சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க... தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

 

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.24) 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

school rain

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவற்றுடன் நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

rain

தொடர்ந்து நிலவி வரும் இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. பொதுமக்களும் விவசாயிகளும் வானிலை மாற்றத்திற்கு ஏற்பத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.