”என் அம்மாவை கொன்னுட்டேன்”.. மகனை கைது செய்த போலீஸ்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

 
சந்திரப்பா - நேத்ரா

பெங்களூரு கே.ஆர்.புரம் பீமையா லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சந்திரப்பா, இவரது மனைவி நேத்ரா . இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் கோலார் மாவட்டம் முல்பாகலில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரும்பு கம்பியால் நேத்ரா படுகொலை செய்யப்பட்டார். காலை உணவு தயாரிக்க தாமதமானதால் தனது அம்மாவை கொலை செய்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

Date with History: KR Puram's history is as entangled as its present  geography - The Economic Times

இதையடுத்து கே.ஆர்.புரம் போலீசார் 17 வயது மாணவனை பிடித்து விசாரணை நடத்தினார். தடயவியல் அறிக்கையில் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியில் 2 பேரின் கைரேகை பதிவாகியுள்ளது. அதில் ஒன்று மாணவரின் கைரேகை. இதனையடுத்து இரும்பு கம்பியில் மற்றொருவரின் கைரேகை இருப்பது குறித்து கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலை நடந்த போது வீட்டில் சிறுவனும், அவனது தந்தை சந்திரபாப்பாவும் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, அவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சந்திரப்பா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சந்திரப்பாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நேத்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவரைக் கொன்றது அவரது 17 வயது மகன் அல்ல, அவரது கணவர் சந்திரப்பா என்பது உறுதியானது. இதனை சந்திரப்பாவும் ஒத்துக்கொண்டுள்ளார்.

மேலும் விசாரித்ததில், ஆடம்பர பிரியர் நேத்ரா, வீட்டில் சமைக்காமல் அடிக்கடி வெளியே சென்று வந்தார். இரவு விருந்துகளில் கலந்து கொண்டார். இதனால், நேத்ராவுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கலாம் என சந்தேகமடைந்த சந்திரப்பா, நேத்ராவிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நேத்ராவுக்கும், அவரது மகனுக்கும் சமைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது இரும்பு கம்பியால் நேத்ராவை அவரது மகன் தாக்கி உள்ளார்.

Bengaluru: Man murders wife with help of son in KR Puram, both arrested |  Bengaluru News - News9live

மேலும் வீட்டில் இருந்த சந்திரபாபா அந்த இரும்பு கம்பியால் நேத்ராவை சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் நேத்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரப்பா தனது மகனிடம் சென்று உனக்கு 17 வயதுதான் ஆகிறது என்று கூறியுள்ளார். உன் மீது கொலை வழக்கு போடப்பட்டாலும் குறைந்த தண்டனையே கிடைக்கும். நீ கொலையை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.தந்தை கூறியபடி 17 வயது மாணவரும் போலீசாருக்கு போன் செய்து, தாயை கொலை செய்துவிட்டதாக கூறி போலீசில் சரண் அடைந்துள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கல்லூரிக்கு செல்வதற்காக காலை உணவை தயார் செய்யுமாறு அம்மாவிடம் கூறியதாகவும், காலை உணவு தயாரிக்க மறுத்ததாகவும், என்னை கடுமையாக திட்டியதால், இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.தற்போது போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மனைவி கொலைக்கு காரணமான சந்திரப்பா போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து கே.ஆர்.புரம் போலீசார் சந்திரபாபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web