திருமணமான 4 மாதங்களில் புதுமணப்பெண் தற்கொலை - கணவர் கைது!

 
புதுமணப்பெண் வரதட்சணை

சென்னை தாம்பரம் அடுத்த படப்பை பகுதியில், திருமணமான நான்கே மாதங்களில் புதுமணப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாகக் கணவரை மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (27) என்பவருக்கும், தாம்பரம் அடுத்த படப்பை அழகூரைச் சேர்ந்த தீபக் (27) என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம்

திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி ராஜேஸ்வரியின் நடத்தை மீது கணவர் தீபக் அடிக்கடி சந்தேகம் கொண்டுள்ளார். மேலும், அவரது செல்போனைத் தொடர்ந்து சோதனை செய்து, யாரிடம் பேசினார் எனக் கேட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.

கணவரின் தொடர் மனரீதியான சந்தேகத்தினாலும் கொடுமையாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஸ்வரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.18) அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

5வது திருமணம்

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மணிமங்கலம் காவல்துறையினர், ராஜேஸ்வரியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும் மனரீதியான கொடுமை இழைத்ததாகவும் கூறி அவரது கணவர் தீபக்கைக் கைது செய்தனர். மேலும், திருமணமாகி குறுகிய காலமே ஆவதால், இதில் வரதட்சணை கொடுமை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் (RDO) தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.