உல்லாசமாக இருந்தபோது மின்சாரம் பாய்ச்சி கணவர் கொலை; கள்ளக்காதலனுடன் மனைவி கைது!
டெல்லியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு மயக்க மாத்திரை கொடுத்து, ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சிக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் முன்னா லால் (55) என்பவர் அவரது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் கணவரைக் கொன்று விட்டதாக அவரது மனைவி நசியா காவல்துறையிடம் நாடகமாடினார்.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில் நசியாவின் நாடகம் அம்பலமானது. நசியாவிற்கும் சமன் (25) என்ற இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கு இடையூறாக இருந்த கணவரைக் தீர்த்துக்கட்ட நசியா திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று கணவருடன் உல்லாசமாக இருந்தபோது, முன்னா லாலுக்கு நசியா மயக்க மாத்திரை கொடுத்துள்ளார். கணவர் மயக்கமடைந்ததும், வீட்டிற்குள் வந்த கள்ளக்காதலன் சமனின் உதவியோடு முன்னா லாலின் ஆணுறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மனைவியையும், அவருக்கு உதவியாக இருந்த கள்ளக்காதலன் சமனையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
