மகளை கொடுமைப்படுத்தும் கணவன்.. மேளதாளத்தோடு மகளை வீட்டிற்கு அழைத்து வந்த தந்தை..!
Oct 22, 2023, 13:24 IST

கணவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் தந்தை வீட்டிற்கு திரும்பிய மகளை மேளதாளத்தோடு வீட்டிற்கு அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜார்க்கண்டை சேர்ந்த பிரேம் குப்தா என்பவர் தனது மகளுக்கு சாக்ஷிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் சாக்ஷிக்கு அவரது கணவர் வீட்டில் பல கொடுமைகள் நடந்துள்ளது.
இதனால் மீண்டும் தனது வீட்டிற்க்கே வர சாக்ஷி முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகளை திருமணம் செய்து கொடுத்த போது எப்படி மேளதாளத்தோடு அனுப்பி வைத்தாரோ அதேபோன்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும்போதும் பிரேம் குப்தா மேளதாளத்தோடு அழைத்து வந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
From around the
web