காருக்குள் கஞ்சா செடி... மனைவியை விவாகரத்து செய்ய கணவர் செய்த பலே காரியம்!
மனைவியிடம் இருந்து எளிதில் விவாகரத்து பெறுவதற்காக, மனைவி ஓட்டிச் செல்லும் காரில் கணவன் கஞ்சா செடியை மறைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டான் சியாங்லாங் (Tan Xianglong) எனும் 37 வயதான நபர் கடந்த 2021ல் சிங்கப்பூரில் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் டான் சியாங்லாங் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை செய்யவில்லை. சிங்கப்பூர் நாட்டு சட்டப்படி திருமணமான 3 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தம்பதியர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பிக்க முடியும். ஆனால் தம்பதியரில் யாராவது ஒருவர் மீது ஏதாவது ஒரு கிரிமினல் வழக்கு இருந்தால் கூட உடனடியாக மற்றவர் விவாகரத்து கோரி உடனே விவாகரத்தும் பெறலாம்.
உடனடியாக விவாகரத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக 500 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரின் காரின் பின்புறம் நட்டு வைத்துள்ளார் கணவர். இதில் பாதி கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்துள்ளன. காரில் கஞ்சா செடி இருப்பது தெரியாமல் ஓட்டிச் சென்ற மனைவியின் காரை சோதனை செய்த போலீசார், போதைப் பொருள்களை கண்டுபிடித்து கைது செய்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில் அவர் கஞ்சா பயிரிட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போலீசார், அவரது கணவர் கஞ்சா செடிகளை காரில் நடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எண்ணிக் கொண்டிருந்த கணவனை போலீசார் கைது செய்தனர். தற்போது அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் போதைப்பொருட்களைக் கடத்தினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா