மனைவியைக் கூறுபோட்டு ஃபிரிட்ஜுக்குள் வைத்த கணவன் - அசாமில் அதிர்ச்சி!

 
கொலை இளம்பெண் மனைவி

அசாம் மாநிலம் குவஹாத்தியில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, மனைவியின் உடலைத் துண்டு துண்டாகக் வெட்டி ஃபிரிட்ஜுக்குள் பதுக்கி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவஹாத்தியின் பசிஸ்தாபூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராமானுஜன். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நூன்மதியைச் சேர்ந்த ரியா (25) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ரியா ஃபேன்சி பஜாரின் ஏசி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆடை அலங்காரக் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். பெற்றோர் இல்லாத இவருக்கு ஒரே ஒரு சகோதரர் மட்டுமே உள்ளார்.

க்

இந்நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இரவு 8 மணியளவில் ரியாவுக்கும் ராமானுஜனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராமானுஜன் தனது மனைவியைக் கொலை செய்துள்ளார்.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாகக் காவல்துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர். அப்போது ரியாவின் தலை மற்றும் விரல்கள் துண்டிக்கப்பட்டு, கருப்பு பாலித்தீன் பையில் வைக்கப்பட்டு பிரிட்ஜில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

துண்டு துண்டாக மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக குவஹாட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி கணவர் ராமானுஜன் காவல்துறையிடம் நேரில் சரணடைந்து குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதமும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.